search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபாட்டில் கடத்தல்"

    புதுவையில் இருந்து விழுப்புரத்துக்கு மதுபாட்டில்கள் கடத்த முயன்ற வாலிபரை கைது செய்த போலீசார் 83 குவாட்டர் பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், குமார், உதவி-சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிநாராயணன் மற்றும் குற்றபிரிவு போலீசார் பராளுமன்ற தேர்தலையொட்டி நேற்று இரவு வில்லியனூர் பகுதியில் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டனர்.

    வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் எம்.ஜி.ஆர். சிலை அருகே ரோந்து சென்ற போது ஒரு வாலிபர் 2 சாக்கு பைகளுடன் நின்று கொண்டு இருந்ததை போலீசார் கண்டனர். இதையடுத்து அந்த வாலிபர் வைத்திருந்த பைகளில் சோதனை நடத்தியபோது அதில் 83 குவாட்டர் பிராந்தி பாட்டில்கள் இருந்தன.

    இதைத்தொடர்ந்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் விழுப்புரம் ரெயில்வே காலனியை சேர்ந்த வெங்கடேசன் (வயது30) என்பதும் இவர் புதுவையில் இருந்து விழுப்புரத்துக்கு பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். #tamilnews
    புதுவையில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில் கடத்திய நகராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
    சேதராப்பட்டு:

    கோட்டக்குப்பம் கலால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் இன்று அதிகாலை பெரிய முதலியார்சாவடி மது விலக்கு சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் மோட் டார் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அந்த சாக்கு மூட்டையில் 110 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள் இருந்தன. இதையடுத்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த சுந்தர் மகன் சுப்பிரமணி (வயது 29). என்பதும், இவர் அங்குள்ள நகராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் இவர் புதுவையில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர். #tamilnews
    புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மரக்காணம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்தனர். அதில் 474 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே கார் டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், அவர் சென்னை கல்லடிப்பட்டு பகுதியை சேர்ந்த அசோக்குமார் (வயது 38) என்பதும், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
    சிதம்பரம் அருகே காரில் கடத்தப்பட்ட 1680 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    புதுவையில் இருந்து சிதம்பரம் வழியாக தஞ்சாவூருக்கு காரில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் மதுவிலக்கு போலீசார் சிதம்பரம் அருகே வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த காரை போலீசார் வழிமறித்து சோதனை நடத்தினர். அந்த காரில் 35 அட்டைபெட்டிகள் இருந்தனர். அதனை பிரித்து பார்த்தபோது அதில் மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கபட்டிருந்தன. அதனை பிரித்து பார்த்தனர். அதில் மொத்தம் 1,680 மதுபாட்டில்கள் இருந்தன.

    இதனைத்தொடர்ந்து போலீசார் காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தஞ்சையை சேர்ந்த அறிவழகன்(27), புதுவை மாநிலம் அரியாங்குப்பத்தை சேர்ந்த அய்யப்பன்(25) என்பதும் தெரியவந்தது.

    2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் காரில் இருந்த மதுபாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்தனர். #tamilnews
    கோவையில் இருந்து 200 மது பாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    கேரள மாநிலம் அட்டப்பாடி அகழி உதவி போலீஸ் சூப்பிரண்டு நவநீதுசர்மா, சோலையூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை அட்டப்பாடி கோட்டத்தரை பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள அரசு ஆஸ்பத்திரி அருகே சென்றபோது பெரிய பெட்டியுடன் 2 வாலிபர்கள் நின்றனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பெரிய பெட்டியை சோதனை செய்தபோது 200 பாட்டில் வெளிநாட்டு மதுபாட்டில் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி சாவடியூரை சேர்ந்த மாரியப்பன் (வயது 27), சாலையூரை சேர்ந்த ராஜேந்திரன் (22) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

    கோவையில் உள்ள வெளிநாட்டு மதுக்கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி அட்டப்பாடி ஆதிவாசி மக்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தியதாக கூறினர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    புதுவையில் இருந்து மதுரைக்கு நூதன முறையில் மதுபாட்டில் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் கடலூர் பெரிய கங்கணாங்குப்பம் என்ற பகுதியில் வாகன சோதனையில் இன்று அதிகாலை ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த போல் இருந்தது. இதனால் மதுவிலக்கு போலீசார் தூங்கிய நபரை எழுப்புவதற்கு காரின் அருகே சென்றனர்.

    ஆனால் இருக்கையில் எந்த நபரும் தூங்கவில்லை. அதற்கு மாறாக தலையணையை அடுக்கி வைத்து, ஒருவர் தூங்குவது போல் தோற்றம் ஏற்படுத்தி இருந்தது தெரிந்தது. இதனால் உஷாரான போலீசார் அதனை அகற்றி பார்த்தபோது அட்டைப் பெட்டி முழுவதும் மதுபாட்டில்கள் இருந்தது.

    இதனையடுத்து மதுவிலக்கு போலீசார் டிரைவரை மது விலக்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் டிரைவர் மதுரை பழங்காநத்தம் சேர்ந்த மணிகண்டன் என்பதும், அவர் 160 மதுபாட்டில்களை மதுரைக்கு கடத்தி செல்வதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து கடலூர் மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் மணிகண்டனை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.
    ×